கால்பந்து

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: சென்னையின் எப்.சி. அணிக்கு மலேசியாவில் பயிற்சி முகாம் + "||" + Indian Super League Soccer: Chennai in FC The team has a training camp in Malaysia

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: சென்னையின் எப்.சி. அணிக்கு மலேசியாவில் பயிற்சி முகாம்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: சென்னையின் எப்.சி. அணிக்கு மலேசியாவில் பயிற்சி முகாம்
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிக்காக சென்னையின் எப்.சி. அணிக்கு மலேசியாவில் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
சென்னை,

10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் செப்டம்பர் கடைசி வாரத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணியின் பயிற்சி முகாம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நாளை மறுநாள் (13-ந் தேதி) தொடங்குகிறது. இதற்காக சென்னையின் எப்.சி. அணி வீரர்கள் வருகிற திங்கட்கிழமை அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு செல்கிறார்கள். பயிற்சி முகாம் பயணத்துக்காக சென்னையின் எப்.சி. அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் கிரிகோரி ஏற்கனவே சென்னை வந்து விட்டார்.


தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் சென்னையின் எப்.சி. அணியின் 4 வீரர்கள் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் மலேசியா செல்கிறார்கள். வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டில் இருந்து நேரடியாக மலேசியாவுக்கு சென்று அணியினருடன் இணைகிறார்கள். மலேசியாவில் 4 வாரம் பயிற்சியில் ஈடுபடும் சென்னையின் எப்.சி. அணியினர் அங்குள்ள அணியுடன் 4 நட்புறவு ஆட்டத்தில் விளையாடுகிறார்கள். பயிற்சி முகாம் முடிந்து சென்னையின் எப்.சி. அணி செப்டம்பர் 11-ந் தேதி சென்னை திரும்புகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு
சென்னையில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
2. பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.73.33 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.
3. பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகள் குறைந்துள்ளது. டீசல் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
4. கருப்பு பண விவகாரம்: சென்னையை சேர்ந்தது உள்பட 2 இந்திய நிறுவனங்களின் முதலீடு பற்றிய விவரங்களை அளிக்க தயார் - சுவிட்சர்லாந்து அரசு சம்மதம்
கருப்பு பணத்துக்கு எதிரான வேட்டையில், சென்னையை சேர்ந்தது உள்பட 2 இந்திய நிறுவனங்களின் முதலீடு பற்றிய விவரங்களை அளிக்க தயார் என்று சுவிட்சர்லாந்து அரசு கூறியுள்ளது.
5. பெட்ரோல் விலை லிட்டருக்கு 34 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 34 காசுகள் குறைந்து ரூ. 76.01 -க்கு விற்பனையாகிறது.