கால்பந்து

நட்புறவு கால்பந்து போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தியது பிரேசில் + "||" + Brazil defeated the US in the friendly football match

நட்புறவு கால்பந்து போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தியது பிரேசில்

நட்புறவு கால்பந்து போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தியது பிரேசில்
நட்புறவு கால்பந்து போட்டியில் அமெரிக்காவை, பிரேசில் அணி வீழ்த்தியது.
நியூஜெர்சி,

பிரேசில் - அமெரிக்கா அணிகள் இடையே நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டி நேற்று முன்தினம் இரவு நியூஜெர்சி நகரில் நடந்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. அமெரிக்காவுக்கு எதிராக பிரேசில் தொடர்ச்சியாக பதிவு செய்த 11-வது வெற்றி இதுவாகும். பிரேசில் அணியில் 11-வது நிமிடத்தில் ராபர்ட்டோ பிர்மினோவும், 43-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மாரும் கோல் அடித்தனர். சர்வதேச போட்டியில் நெய்மாரின் 58-வது கோல் இதுவாகும். உலக கோப்பை போட்டியில் கால்இறுதியுடன் வெளியேறிய பிரேசில் அணி அதன் பிறகு ஆடிய முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக வங்கி தலைவர் பொறுப்பிற்கு இந்திரா நூயியை முன்னிறுத்த அமெரிக்கா பரிசீலனை?
உலக வங்கி தலைவர் பொறுப்பிற்கு இந்திரா நூயியை முன்னிறுத்த அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2. அமெரிக்க சிறையில் உள்ள மும்பை தாக்குதல் குற்றவாளி ராணா, இந்தியாவுக்கு நாடுகடத்த வலுவான வாய்ப்பு
மும்பை தாக்குதல் குற்றவாளி ராணா அமெரிக்காவில் சிறைத்தண்டனை முடிவடைவதற்கு முன் இந்தியாவுக்கு நாடுகடத்த வலுவான வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
3. எல்லை சுவர் கட்டுவதற்காக தேசிய அவசர நிலையா? டொனால்டு டிரம்ப் பதில்
எல்லை சுவர் கட்டுவதற்காக தேசிய அவசர நிலை அறிவிப்பை நெருங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
4. அரசுத்துறைகள் முடக்கம் ஒருவருடம் கூட நீடிக்கும்: டிரம்ப் எச்சரிக்கை
அரசுத்துறைகள் முடக்கம் ஒருவருடம் கூட நீடிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5. சீனா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை
சீனா-அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.