கால்பந்து

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
4 நாடுகள் மோதிய 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்து போட்டி குரோஷியாவில் நடந்தது.

* ஜெர்மனி-பெரு அணிகள் இடையிலான நட்புறவு கால்பந்து போட்டி ஜெர்மனியில் உள்ள சின்ஸ் ஹெய்ம் நகரில் நேற்று முன்தினம் நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சரிவில் இருந்து மீண்டு வந்த ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தியது. பெரு அணியில் லூயிஸ் அட்வின்குலாஸ் 22-வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஜெர்மனி அணி தரப்பில் ஜூலியன் பிரான்ட்ஸ் 25-வது நிமிடத்திலும், நிகோ ஹூல்ஸ் 85-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

* ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 15-ந் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியில் இடம் பிடித்து இருந்த பேட்ஸ்மேன் சண்டிமாலுக்கு வலது கைவிரலில் ஏற்பட்டு இருந்த காயம் இன்னும் முழுமையாக குணம் அடையாததால் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக நிரோஷன் டிக்வெல்லா இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

* ஐரோப்பிய கால்பந்து சங்கத்தின் உறுப்பினர் நாடுகள் பங்கேற்கும் முதலாவது நேஷனல் லீக் கால்பந்து போட்டி அங்கு பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் 55 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இதில் பிரான்ஸ் நாட்டில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியன் பிரான்ஸ் அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. பிரான்ஸ் அணியில் கைலியன் மாப்பே 14-வது நிமிடத்திலும், ஆலிவர் ஜிரோட் 75-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். நெதர்லாந்து அணி தரப்பில் ரையான் பாபெல் 67-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். கடந்த ஜூலை மாதம் உலக கோப்பையை வென்ற பிறகு பிரான்ஸ் கால்பந்து அணி உள்ளூரில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

* 4 நாடுகள் மோதிய 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்து போட்டி குரோஷியாவில் நடந்தது. இதில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் அணியுடன் மோதியது. இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் தோல்வி கண்டது. இந்த போட்டி தொடரில் இந்திய அணி வெற்றி எதுவும் பெறவில்லை. ஏற்கனவே குரோஷியா, சுலோவேனியா அணிகளிடம் தோல்வி கண்டு இருந்தது. அடுத்து இந்திய அணி, செர்பியா அணியுடன் வருகிற 13 மற்றும் 17-ந் தேதிகளில் நட்புறவு கால்பந்து போட்டியில் விளையாடுகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...