கால்பந்து

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி + "||" + South Asian Football Championship: qualifying for the Indian team final

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது.
டாக்கா,

7 அணிகள் பங்கேற்றுள்ள தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் வங்காள தேசத்தில் நடந்து வருகிறது. இதன் அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு, நேபாளம் அணிகள் முன்னேறியது.

இதில் முதல் அரையிறுதியில் மாலத்தீவு - நேபாளம் அணிகள் மோதின. இதில் மாலத்தீவு 3-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்து நடந்த இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது.


பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அடுத்து நடந்த இரண்டாவது பாதி நேரத்தில் இந்தியாவின் மன்வீர் சிங் 48 மற்றும் 69-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். மேலும் இந்தியாவின் சுமீத் பாஸ்சி 84-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். பாகிஸ்தான் அணியின் சார்பில் முகமது அலி தோபஸ் 88-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் இந்திய அணி 3-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

15ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா - மாலத்தீவு அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.



தொடர்புடைய செய்திகள்

1. தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் இந்தியா-பாகிஸ்தான்
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் அரைஇறுதியில் இந்தியா-பாகிஸ்தான் அண்கள் மோத உள்ளன.