கால்பந்து

நட்புறவு கால்பந்து போட்டி பிரேசில் அணி அபார வெற்றி + "||" + Friendly football match The Brazil team is a great success

நட்புறவு கால்பந்து போட்டி பிரேசில் அணி அபார வெற்றி

நட்புறவு கால்பந்து போட்டி பிரேசில் அணி அபார வெற்றி
பிரேசில் கால்பந்து அணி, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து நட்புறவு கால்பந்து போட்டியில் விளையாடி வருகிறது.

லேண்ட்ஓவர், 

பிரேசில் கால்பந்து அணி, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து நட்புறவு கால்பந்து போட்டியில் விளையாடி வருகிறது. லேண்ட் ஓவரில் நடந்த ஆட்டம் ஒன்றில் பிரேசில்–மத்திய அமெரிக்க பகுதியை சேர்ந்த எல் சல்வோடர் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணி 5–0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் 4–வது நிமிடத்திலும், ரிச்சர்லிசன் 16–வது மற்றும் 50–வது நிமிடங்களிலும், கோடின்ஹோ 30–வது நிமிடத்திலும், மார்கின்ஹோஸ் 90–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.