தெற்காசிய கால்பந்து போட்டி: இந்திய அணியை வீழ்த்தி மாலத்தீவு ‘சாம்பியன்’


தெற்காசிய கால்பந்து போட்டி: இந்திய அணியை வீழ்த்தி மாலத்தீவு ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 15 Sep 2018 9:15 PM GMT (Updated: 15 Sep 2018 7:39 PM GMT)

12–வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்தது.

டாக்கா, 

12–வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான மாலத்தீவை எதிர்கொண்டது. இறுதிபோட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி 8–வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்று எதிர்பார்த்த ரசிகர்களின் கனவு ஈடேறவில்லை. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1–2 என்ற கோல் கணக்கில் மாலத்தீவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு 2–வது இடத்துடன் திருப்திபட வேண்டியதானது. மாலத்தீவு அணியில் இப்ராகிம் 19–வது நிமிடத்திலும், அலி பாசிர் 66–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்திய அணி தரப்பில் சுமீத் பாசி 90–வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.

உலக தரவரிசையில் 150–வது இடத்தில் இருக்கும் மாலத்தீவு அணி, 96–வது இடத்தில் உள்ள இந்திய அணியிடம் லீக் ஆட்டத்தில் (0–2) தோல்வி கண்டு இருந்தது. அந்த தோல்விக்கு பழிதீர்த்ததுடன், தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டத்தையும் 2–வது முறையாக கைப்பற்றியது. அந்த அணி ஏற்கனவே 2008–ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்று இருந்தது. இந்திய அணியுடன் 17–வது முறையாக மோதிய மாலத்தீவு அணி பெற்ற 3–வது வெற்றி இதுவாகும்.


Next Story