கால்பந்து

ஆசிய பெண்கள் கால்பந்து தகுதி சுற்று: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 2-வது வெற்றி + "||" + Asian Women's Football Qualification Round: India's 2nd World Cup win over Pakistan

ஆசிய பெண்கள் கால்பந்து தகுதி சுற்று: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 2-வது வெற்றி

ஆசிய பெண்கள் கால்பந்து தகுதி சுற்று: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 2-வது வெற்றி
ஆசிய பெண்கள் கால்பந்து தகுதி சுற்று போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 2-வது வெற்றியை பெற்றது.
புதுடெல்லி,

16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த ஆண்டு தாய்லாந்தில் நடக்கிறது. இதற்கான முதல் கட்ட தகுதி சுற்று போட்டி மங்கோலியாவில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, பாகிஸ்தானை சந்தித்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

முதல் ஆட்டத்தில் ஹாங்காங்கை வென்று இருந்தது. இந்திய அணி தரப்பில் அவிகா சிங் 22-வது நிமிடத்திலும், சுனிதா முன்டா 82-வது நிமிடத்திலும், ஷில்கி தேவி 88-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்திய அணிக்கு 2-வது கோல் பாகிஸ்தான் கோல்கீப்பர் ஆயிஷா மூலம் சுயகோலாக வந்தது. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் மங்கோலியாவை நாளை எதிர்கொள்கிறது.


ஆசிரியரின் தேர்வுகள்...