ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணி முதல் வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணி முதல் வெற்றி
x
தினத்தந்தி 4 Oct 2018 8:03 PM GMT (Updated: 4 Oct 2018 8:03 PM GMT)

10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

கொல்கத்தா,

10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்றிரவு அரங்கேறிய 6-வது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடியும் என்று எதிர்பார்த்த நிலையில் 89-வது நிமிடத்தில் கவுகாத்தி வீரர் ரோலின் போர்கெஸ் தலையால் முட்டி கோல் அடித்து அசத்தினார். முன்னதாக கொல்கத்தா வீரர் செனா ரால்ட் முரட்டு ஆட்டம் காரணமாக 32-வது நிமிடத்தில் 2-வது முறையாக மஞ்சள் அட்டை பெற்றதால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் 10 வீரர்களுடன் விளையாடியது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. முடிவில் கவுகாத்தி அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. அந்த அணி முதல் ஆட்டத்தில் டிரா கண்டு இருந்தது. கொல்கத்தா அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.

கொச்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதுகின்றன.

Next Story