கால்பந்து

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
இந்திய அணி நட்புறவு கால்பந்து போட்டியில், சீனாவை வருகிற 13-ந்தேதி சந்திக்க இருக்கிறது.

* இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டியினர் ஐதராபாத்தில் இன்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் தேர்வு குழுவினரை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். வீரர்கள் மற்றும் தேர்வு குழுவுக்கு இடையே சரியான தகவல் பரிமாற்றம் இல்லை என்ற குற்றச்சாட்டு, அடுத்த வரும் ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராகுதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது.

* இந்திய அணி நட்புறவு கால்பந்து போட்டியில் சீனாவை அந்த நாட்டில் உள்ள சுஜோவ் நகரில் வருகிற 13-ந்தேதி சந்திக்க இருக்கிறது. இந்திய அணி சீனாவில் விளையாட இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த போட்டிக்கான இந்திய அணியை தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டின் நேற்று அறிவித்தார். அணியில் இருந்து பல்வந்த்சிங் கழற்றி விடப்பட்டார். மற்றபடி சுனில் சேத்ரி, ஜெஜெ லால்பெகுலா, கரன்ஜித்சிங், சந்தேஷ் ஜின்கான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

* ‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடருக்கு எனது பங்களிப்பு போதுமானதாக இருக்காது என்று உணரும் பட்சத்தில் அணியில் இருந்து தைரியமாக ஒதுங்கி கொள்வேன்’ என்று இங்கிலாந்து ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் இயான் மோகன் அறிவித்துள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. இந்திய அணியின் 4-வது வரிசை வீரரை ஐ.பி.எல். போட்டி முடிவு செய்யும் - கங்குலி சொல்கிறார்
இந்திய அணியில் பேட்டிங்கில் 4-வது வரிசைக்குரிய வீரரை ஐ.பி.எல். போட்டி முடிவு செய்யும் என்றும், விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்டுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவும் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியுள்ளார்.
2. 3வது டி20 கிரிக்கெட்; டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு
நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
3. டோனி மீது ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடும் விமர்சனம்
இந்திய அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் டோனியை விமர்சித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.
4. ‘இந்திய அணியின் சிறந்த பேட்டிங் இது கிடையாது’ - சேப்பல்
இந்திய அணியின் சிறந்த பேட்டிங் இது கிடையாது என இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.
5. இந்திய அணிக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வென்ற இந்திய அணிக்கு, பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.