கால்பந்து

மெஸ்சிக்கு எலும்பு முறிவு3 வாரங்கள் விளையாட முடியாது + "||" + For Messi fracture 3 weeks can not play

மெஸ்சிக்கு எலும்பு முறிவு3 வாரங்கள் விளையாட முடியாது

மெஸ்சிக்கு எலும்பு முறிவு3 வாரங்கள் விளையாட முடியாது
அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான லயோனல் மெஸ்சிக்கு, முழங்கைக்கு சற்று கீழே எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான லயோனல் மெஸ்சி, ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோனா கிளப்புக்காக விளையாடி வருகிறார். லாலிகா கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் சிவில்லா அணிக்கு எதிரான ஆட்டத்தில் களம் கண்ட மெஸ்சி 12-வது நிமிடத்தில் கோல் அடித்தார். 26-வது நிமிடத்தில் அவரை எதிரணி வீரர் பிராங்கோ வஸ்கியூஸ் லேசாக தள்ளிவிட்டதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். வலது கை மைதானத்தில் பலமாக இடித்தது. வலியால் துடித்த அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். பரிசோதனையில், முழங்கைக்கு சற்று கீழே எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அவரால் 3 வாரங்களுக்கு விளையாட முடியாது என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி அடுத்த 6 ஆட்டங்களை அவர் தவற விடுகிறார். இதற்கிடையே அந்த ஆட்டத்தில் பார்சிலோனா 4-2 என்ற கோல் கணக்கில் சிவில்லா அணியை வீழ்த்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. மெஸ்சி, ரொனால்டோவின் ஆதிக்கத்துக்கு முடிவுகட்டி சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை பெற்றார், மோட்ரிச்
பிரான்ஸ் நாட்டின் கால்பந்து பத்திரிகை சார்பில் ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி ஓர் விருது வழங்கப்படுகிறது.