கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி முதல் வெற்றி பெறுமா? டெல்லியுடன் இன்று மோதல் + "||" + ISL Football Will Chennai win first? Conflict with Delhi today

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி முதல் வெற்றி பெறுமா? டெல்லியுடன் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி முதல் வெற்றி பெறுமா? டெல்லியுடன் இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை-டெல்லி அணிகள் மோதுகின்றன.
புதுடெல்லி,

10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லி நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் எப்.சி.-சென்னையின் எப்.சி. அணிகள் மோதுகின்றன.


நடப்பு சாம்பியனான சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியிடமும் (0-1), 2-வது ஆட்டத்தில் கோவா அணியிடமும் (1-3), 3-வது ஆட்டத்தில் கவுகாத்தி அணியிடமும் (3-4) அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. டெல்லி அணி முதல் ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் புனேவுடன் டிராவும், 2-வது ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவிடம் தோல்வியும், 3-வது ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் கேரளாவுடன் டிராவும் கண்டது.

முதல் வெற்றியை பெறுவது யார்? கவுகாத்தி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றாலும், தடுப்பு ஆட்டத்தில் செய்த தவறால் தோல்வியை சந்தித்தது. தடுப்பு ஆட்டத்தில் சென்னை அணி முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். சென்னை, டெல்லி அணிகள் இன்னும் வெற்றி கணக்கை தொடங்கவில்லை. இதனால் முதல் வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

சென்னை, டெல்லி அணிகள் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் டெல்லி அணி 4 முறையும், சென்னை அணி ஒரு தடவையும் வென்று இருக்கின்றன. 3 ஆட்டம் டிராவில் முடிந்தது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இதற்கிடையில் புனேயில் நேற்று இரவு அரங்கேறிய 15-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.புனே சிட்டி-பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தியது. பெங்களூரு அணியில் சுனில் சேத்ரி 41-வது மற்றும் 43-வது நிமிடத்திலும், மிகு 64-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். புனே அணி பதில் கோல் திருப்ப எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. 3-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி 2 வெற்றி, ஒரு டிராவுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. 3-வது ஆட்டத்தில் ஆடிய புனே அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். ஒரு ஆட்டத்தில் அந்த அணி டிரா கண்டு இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லியை சாய்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணியை சாய்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது வெற்றியை பெற்றது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு 148 ரன்கள் வெற்றி இலக்கு
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணிக்கு 148 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை அணி 2-வது வெற்றி பெறுமா? - டெல்லியுடன் இன்று மோதல்
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் கோவா அணி
ஐ.எஸ்.எல். கால்பந்தின் இறுதிப்போட்டிக்கு கோவா அணி தகுதிபெற்றது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணியை வீழ்த்தி பெங்களூரு இறுதிப்போட்டிக்கு தகுதி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கவுகாத்தி அணியை வீழ்த்தி பெங்களூரு இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.