கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-டெல்லி ஆட்டம் ‘டிரா’ + "||" + ISL Football: Chennai-Delhi match 'Draw'

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-டெல்லி ஆட்டம் ‘டிரா’

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-டெல்லி ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை - டெல்லி அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா ஆனது.
புதுடெல்லி,

10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லி நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 16-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் எப்.சி.-சென்னையின் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க அதிக தீவிரம் காட்டினாலும் கடைசி வரை கோல் எதுவும் விழவில்லை.


சென்னை அணி வீரர்கள் எதிரணி கோல் எல்லையை முற்றுகையிட்டு 17 முறை ஷாட்டுகள் அடித்தனர். ஆனால் சென்னை அணியின் முயற்சிகளை டெல்லி கோல்கீப்பர் பிரான்சிஸ்கோ முறியடித்தார். முடிவில் இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. முதல் 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த நடப்பு சாம்பியனான சென்னை அணி முதல் டிரா கண்டு ஒரு புள்ளி பெற்றுள்ளது. டெல்லி அணி சந்தித்த 3-வது டிரா இதுவாகும்.

கோவா நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 17-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் 3 தொகுதிகளில் விஜயகாந்த் நாளை பிரச்சாரம் செய்கிறார்
சென்னையில் 3 தொகுதிகளில் விஜயகாந்த் நாளை பிரச்சாரம் செய்கிறார் என தேமுதிக அறிவித்துள்ளது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-பஞ்சாப் அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மல்லுகட்டுகின்றன.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-மும்பை அணிகள் இன்று இரவு மும்பையில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
4. பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்
5. 4 வயதில் நெதர்லாந்து குடும்பத்தால் தத்தெடுப்பு: சென்னையில், பெற்றோரை தேடி அலையும் வாலிபர் வளர்ப்பு தாயும், சகோதரரும் உதவுகிறார்கள்
4 வயதில் நெதர்லாந்து குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்ட வாலிபர், தற்போது தனது பெற்றோரை தேடி சென்னையில் அலைகிறார். அவருக்கு உதவியாக அவரது வளர்ப்பு தாயும், சகோதரரும் உதவியாக இருக்கிறார்கள்.