கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து:கவுகாத்தியுடன் ‘டிரா’ செய்தது, ஜாம்ஷெட்பூர் + "||" + ISL Football

ஐ.எஸ்.எல். கால்பந்து:கவுகாத்தியுடன் ‘டிரா’ செய்தது, ஜாம்ஷெட்பூர்

ஐ.எஸ்.எல். கால்பந்து:கவுகாத்தியுடன் ‘டிரா’ செய்தது, ஜாம்ஷெட்பூர்
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து கவுகாத்தியுடனான போட்டியில் ஜாம்ஷெட்பூர் டிரா செய்தது.
கவுகாத்தி, 

5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) தொடரில் நேற்றிரவு கவுகாத்தியில் அரங்கேறிய ஜாம்ஷெட்பூர் எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது. கவுகாத்தி அணியில் பார்தோலோம் ஒக்பேச் (20 நிமிடம்), ஜாம்ஷெட்பூர் அணியில் பாருக் சவுத்ரி (49-வது நிமிடம்) கோல் போட்டனர்.

கொல்கத்தாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கும் 19-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி அணி, முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. இதுவரை 4 ஆட்டத்தில் விளையாடி ஒரு டிரா, 3 தோல்வி கண்டுள்ள சென்னை அணி, வெற்றிக்கணக்கை இன்றைய ஆட்டத்திலாவது தொடங்குமா? என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் கோவா அணி
ஐ.எஸ்.எல். கால்பந்தின் இறுதிப்போட்டிக்கு கோவா அணி தகுதிபெற்றது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணியை வீழ்த்தி பெங்களூரு இறுதிப்போட்டிக்கு தகுதி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கவுகாத்தி அணியை வீழ்த்தி பெங்களூரு இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணி ஆறுதல் வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கொல்கத்தா அணி ஆறுதல் வெற்றிபெற்றது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை-ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிரா ஆனது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேற்றம்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கோவா அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.