கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’ + "||" + ISL Football: Kerala-Jamshedpur Match 'Draw'

ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’

ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளா-ஜாம்ஷெட்பூர் இடையிலான ஆட்டம் டிரா ஆனது.
ஜாம்ஷெட்பூர்,

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு ஜாம்ஷெட்பூரில் நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஜாம்ஷெட்பூர் அணி முதல் பாதியில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அந்த அணி வீரர்கள் டிம் காஹில் 3-வது நிமிடத்திலும், மிச்செல் சூசைராஜ் 31-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஆனால் கடைசி கட்டத்தில் ஆக்ரோஷமாக தாக்குதல் ஆட்டத்தை தொடுத்த கேரளா அணி சரிவில் இருந்து மீண்டு சமநிலையை எட்டியது. கேரளா அணி தரப்பில் லாவிஸ்லா ஸ்டோஜனோவிச் 71-வது நிமிடத்திலும், சி.கே.வினீத் 86-வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பினார்கள்.


டெல்லியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிகள் மோதுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு : கேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்
சபரிமலை கோவில் நடை நாளை திறக்கப்பட உள்ள நிலையில் கேரளாவில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
2. சபரிமலை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு
சபரிமலை விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு கேரளா முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து; சென்னை அணி முதல் வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணி 4-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கேரளா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 4-வது வெற்றியை பதிவு செய்தது.
5. சபரிமலையில் தந்திரி அலுவலகத்தில் மொபைல் போன் ‘ஜாமர்’ கருவி பொருத்தம் - கேரளா போலீஸ் நடவடிக்கை
சபரிமலையில் தந்திரியை பத்திரிக்கையாளர்கள் தொடர்புக் கொள்ள முடியாத வகையில் போலீஸ் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.