கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: புனே-கேரளா ஆட்டம் ‘டிரா’ + "||" + ISL Football: Pune-Kerala Match 'Draw'

ஐ.எஸ்.எல். கால்பந்து: புனே-கேரளா ஆட்டம் ‘டிரா’

ஐ.எஸ்.எல். கால்பந்து: புனே-கேரளா ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், புனே மற்றும் கேரளா அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிரா ஆனது.
புனே,

5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) போட்டியில் நேற்றிரவு புனேயில் நடந்த எப்.சி.புனே சிட்டி-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 13-வது நிமிடத்தில் மார்கோ ஸ்டான்கோவிச் (புனே), 61-வது நிமிடத்தில் நிகோலா கிர்மாரேவிச் (கேரளா) ஆகியோர் கோல் போட்டனர். முன்னதாக 55-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை புனே வீரர் எமிலியானோ அல்பரோ, கம்பத்தில் அடித்து வீணாக்கினார். கேரளா தொடர்ச்சியாக சந்தித்த 4-வது டிரா இதுவாகும். புனே அணி 2 டிரா, 3 தோல்வி என்று 2 புள்ளியுடன் பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவிடம் வீழ்ந்தது கொல்கத்தா
10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
2. தேர்தல் நெருங்கும் நிலையில் ‘கை’ கோவிலை நோக்கி படையெடுக்கும் அரசியல்வாதிகள்
2019 தேர்தல் நெருங்கும் நிலையில் கேரளாவில் உள்ள கை கோவிலை நோக்கி அரசியல்வாதிகள் படையெடுத்துள்ளனர்.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 2-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூருவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-பெங்களூரு அணிகள் இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை-பெங்களூரு அணிகள் இன்று மோத உள்ளன.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி-கவுகாத்தி ஆட்டம் டிரா
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், டெல்லி-கவுகாத்தி அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிரா ஆனது.