கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியின் தோல்வி தொடருகிறது + "||" + ISL Football: The Chennai team's failure continues

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியின் தோல்வி தொடருகிறது

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியின் தோல்வி தொடருகிறது
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை அணியின் தோல்வி தொடருகிறது.
சென்னை,

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 27-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, மும்பை சிட்டி எப்.சி.யை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மும்பை அணி 20-வது நிமிடத்தில் கோல் அடித்தது.

அந்த அணி வீரர் மொடோவ் சோகோவ் கோலை நோக்கி அடித்த பந்தை சென்னை அணியின் கோல்கீப்பர் கரண்ஜித் சிங் தடுத்தார். அவரது கையில் பட்டு திரும்பிய பந்தை மொடோவ் சோகோவ் மின்னல் வேகத்தில் அடித்து கோலுக்குள் திணித்தார். இந்த சீசனில் சென்னை அணி விட்டுக்கொடுத்த 11-வது கோல் இதுவாகும். முதல் பாதியில் மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பதில் கோல் திருப்ப சென்னை அணி மேற்கொண்ட முயற்சிக்கு கடைசி வரை பலன் கிட்டவில்லை. முடிவில் மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தியது.

6-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும். ஒரு ஆட்டத்தில் டிரா கண்டு இருந்தது. மும்பை அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. டெல்லியில் இன்று நடைபெறும் 28-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் எப்.சி.-ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் (இரவு 7.30 மணி) மோதுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி: சென்னை அணிக்கு 162 ரன்கள் வெற்றி இலக்கு
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணிக்கு 162 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #RCBVsCSK
2. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லியை சாய்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணியை சாய்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது வெற்றியை பெற்றது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு 148 ரன்கள் வெற்றி இலக்கு
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணிக்கு 148 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை அணி 2-வது வெற்றி பெறுமா? - டெல்லியுடன் இன்று மோதல்
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி முதல்முறையாக ‘சாம்பியன்’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி முதல்முறையாக மகுடம் சூடியது.