கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி- ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’ + "||" + ISL Football: Delhi - Jamshedpur Match 'Draw'

ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி- ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’

ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி- ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், டெல்லி மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிரா ஆனது.
புதுடெல்லி,

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு டெல்லியில் நடந்த 28-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் அணி, ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.


டெல்லி அணியில் லாலியன்ஜூலா சாங்தே (55-வது நிமிடம்), அட்ரியா கார்மோனா (58-வது நிமிடம்), ஜாம்ஷெட்பூர் அணியில் செர்ஜியோ சிடோன்ச்சா (39-வது நிமிடம்), டிரி (72-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத டெல்லி அணி சந்தித்த 4-வது டிரா இதுவாகும். 7-வது லீக்கில் ஆடிய ஜாம்ஷெட்பூர் அணி 2 வெற்றி, 5 டிரா என்று 11 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இன்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-பெங்களூரு எப்.சி. (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
டெல்லியில் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
2. கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த டெல்லி வாசிகள் ! காற்று மாசு அபாய அளவை எட்டியது
கட்டுப்பாட்டை டெல்லி மக்கள் நேற்று இரவு நீண்ட நேரம் பட்டாசு வெடித்ததால், காற்று மாசின் அளவு அபாய கட்டத்தை எட்டியது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து; சென்னை அணி முதல் வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணி 4-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கேரளா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 4-வது வெற்றியை பதிவு செய்தது.
5. புரோ கபடி: குஜராத்திடம் வீழ்ந்தது டெல்லி
புரோ கபடி போட்டியில், டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது.