ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லியை வீழ்த்தி கோவா அணி 4-வது வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லியை வீழ்த்தி கோவா அணி 4-வது வெற்றி
x
தினத்தந்தி 8 Nov 2018 9:15 PM GMT (Updated: 8 Nov 2018 9:00 PM GMT)

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கோவா நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 31-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி 3-2 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை தோற்கடித்தது.

கோவா, 

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கோவா நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 31-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி 3-2 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை தோற்கடித்தது. ஒரு கட்டத்தில் கோவா அணி 1-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில் பிரான்டன் பெர்னாண்டஸ் (82-வது நிமிடம்), எடு பெடியா (89-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டு அந்த அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர். கோவா அணி 4 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி என்று 13 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. டெல்லி அணிக்கு இது 4-வது தோல்வியாகும். இன்றைய ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)- மும்பை சிட்டி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story