கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணி முதல் தோல்வி + "||" + ISL Football: Guwahati team's first defeat

ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணி முதல் தோல்வி

ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணி முதல் தோல்வி
5–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கவுகாத்தியில் நடந்த 32–வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. அணி 1–0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) வீழ்த்தி 4–வது வெற்றியை பதிவு செய்தது.

கவுகாத்தி, 

5–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கவுகாத்தியில் நடந்த 32–வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. அணி 1–0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) வீழ்த்தி 4–வது வெற்றியை பதிவு செய்தது. வெற்றிக்குரிய கோலை 4–வது நிமிடத்தில் அர்னால்டு இசோகோ அடித்தார். கவுகாத்தி அணிக்கு இது முதலாவது தோல்வியாகும். 6–வது ஆட்டத்தில் ஆடிய அந்த அணி 3 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி என்று 11 புள்ளிகள் பெற்றுள்ளது.

இன்றைய ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா– எப்.சி. புனே சிட்டி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.