கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி 5–வது வெற்றி + "||" + ISL Football: Goa team 5th win

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி 5–வது வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி 5–வது வெற்றி
10 அணிகள் இடையிலான 5–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் நேற்றிரவு கொச்சியில் நடந்த 34–வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொண்டது.

கொச்சி, 

10 அணிகள் இடையிலான 5–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் நேற்றிரவு கொச்சியில் நடந்த 34–வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய எப்.சி. கோவா அணி 3–1 என்ற கோல் கணக்கில் கேரளாவை சாய்த்தது. கோவா அணியில் பெர்ரன் கோராமினாஸ் (11, 45–வது நிமிடம்), மன்விர்சிங் (67–வது நிமிடம்) கோல் போட்டனர். 7–வது லீக்கில் ஆடிய கோவா அணி 5 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி என்று 16 புள்ளிகளுடன், தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. கேரள அணிக்கு இது 2–வது தோல்வியாகும்.

இந்திய கால்பந்து அணி ஜோர்டானுக்கு எதிரான சர்வதேச போட்டியில் விளையாட இருப்பதால் அதை கருத்தில் கொண்டு ஐ.எஸ்.எல். தொடரில் 9 நாட்கள் இடைவெளி விடப்பட்டுள்ளது. 21–ந்தேதி நடக்கும் அடுத்த ஆட்டத்தில் புனே சிட்டி–ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதுகின்றன.