கால்பந்து

ஒலிம்பிக் கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று: 2-வது சுற்றில் இந்திய பெண்கள் அணி + "||" + Eligibility for the Olympic football tournament: Indian women team in the 2nd round

ஒலிம்பிக் கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று: 2-வது சுற்றில் இந்திய பெண்கள் அணி

ஒலிம்பிக் கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று: 2-வது சுற்றில் இந்திய பெண்கள் அணி
ஒலிம்பிக் கால்பந்து போட்டியின் 2-வது தகுதிச் சுற்றுக்கு, இந்திய பெண்கள் அணி முன்னேறியது.
யான்கோன்,

ஒலிம்பிக் போட்டிக்கான பெண்கள் கால்பந்து தகுதி சுற்று போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஆசிய மண்டலத்திற்கான தகுதி சுற்றில் ‘சி’ பிரிவில் அங்கம் வகித்த இந்திய பெண்கள் அணி யான்கோன் நகரில் நேற்று நடந்த மியான்மருக்கு எதிரான ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இருப்பினும் தனது பிரிவில் 4 புள்ளிகளுடன் (ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி) 2-வது இடம் பிடித்த இந்திய அணி, தகுதி போட்டியின் 2-வது ரவுண்டுக்கு முதல்முறையாக முன்னேறியது. 2-வது தகுதி சுற்று போட்டிகள் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடக்கிறது.