கால்பந்து

சர்வதேச நட்புறவு கால்பந்து: பிரேசில் அணியிடம் உருகுவே தோல்வி + "||" + International Friendship Football: Uruguay's failure to Brazil

சர்வதேச நட்புறவு கால்பந்து: பிரேசில் அணியிடம் உருகுவே தோல்வி

சர்வதேச நட்புறவு கால்பந்து: பிரேசில் அணியிடம் உருகுவே தோல்வி
சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில், பிரேசில் அணியிடம் உருகுவே தோல்வியடைந்தது.
லண்டன்,

5 முறை உலக சாம்பியன் பிரேசில்-உருகுவே அணிகள் இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று முன்தினம் நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பந்து அதிக நேரம் பிரேசில் அணியினர் வசம் இருந்தாலும் எளிதில் கோல் அடிக்க முடியவில்லை. 76-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி நட்சத்திர வீரர் நெய்மார் கோல் அடித்தார்.


உருகுவே பின்கள வீரர் டியாகோ லாக்சல்ட் முரட்டு ஆட்டத்தால் பிரேசில் வீரர் டானிலோவை தடுத்ததற்காக வழங்கப்பட்ட இந்த பெனால்டி வாய்ப்புக்கு உருகுவே வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்த எதிர்ப்புக்கு நடுவர் பணியவில்லை. உருகுவே அணி வீரர்கள் லூயிஸ் சுவாரஸ், எடிசன் கவானி ஆகியோர் கோலை நோக்கி அடித்த அபாரமான ஷாட்களை பிரேசில் அணியின் கோல்கீப்பர் அலிசன் லாவகமாக தடுத்து நிறுத்தினார். முடிவில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது.