கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை–ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல் + "||" + ISL Football: Chennai-Jamshedpur teams face today

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை–ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை–ஜாம்ஷெட்பூர் அணிகள் இன்று மோதல்
5–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

ஜாம்ஷெட்பூர், 

5–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜாம்ஷெட்பூரில் இன்று நடக்கும் 39–வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை (இரவு 7.30 மணி) எதிர்கொள்கிறது. 7 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு டிரா, 5 தோல்வி என்று 4 புள்ளி மட்டுமே பெற்றுள்ள சென்னை அணி புள்ளி பட்டியலில் 9–வது இடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மும்பையில் நேற்றிரவு நடந்த மும்பை சிட்டி– அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் இடையிலான ஆட்டம் கோல் இன்றி (0–0) டிராவில் முடிந்தது.