கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? - இன்று மோதல் + "||" + ISL Football: Kolkata team Will Chennai be retaliated? - Confrontation today

ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? - இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? - இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடரில் இன்று இரவு சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
சென்னை,

10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இந்த போட்டி தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் 46-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.


இந்த சீசனில் சென்னை அணி எதிர்பார்ப்புக்கு தகுந்த படி சிறப்பாக விளையாடவில்லை. தடுப்பு ஆட்டத்தில் பலவீனமாக காணப்படும் சென்னை அணி கோல் அடிப்பதிலும் ஏமாற்றம் அளித்து வருகிறது. சென்னை அணி இதுவரை 9 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 6 தோல்வி கண்டுள்ளது. அத்துடன் சென்னை அணி 16 கோல்கள் விட்டுக்கொடுத்து இருக்கிறது. உள்ளூரில் 4 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் சென்னை அணி ஒன்றில் கூட வெற்றியை ருசிக்கவில்லை.

கொல்கத்தா அணி 9 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 3 டிரா, 3 தோல்வி கண்டுள்ளது. அந்த அணியின் தடுப்பு ஆட்டம் அருமையாக இருக்கிறது. சொந்த ஊரில் நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தியது. அந்த நம்பிக்கையுடன் கொல்கத்தா அணி களம் இறங்கும். அதேநேரத்தில் சென்னை அணி முந்தைய ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்த நிலையில் பெங்களூரு எப்.சி. அணியின் ரசிகர்கள் போட்டி நடுவர்களை திட்டியதற்காக பெங்களூரு எப்.சி. அணிக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவில் நடந்த எப்.சி.புனே சிட்டி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது பெங்களூரு அணியின் ரசிகர்கள் தொடர்ந்து நடுவர்களுக்கு எதிராக குரல் எழுப்பினார்கள். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய இந்திய கால்பந்து சம்மேளன ஒழுங்கு நடவடிக்கை குழு இந்த அபராதத்தை விதித்துள்ளது. ரசிகர்களின் மோசமான நடத்தைக்காக ஐ.எஸ்.எல். போட்டியில் ஒரு அணிக்கு அபராதம் விதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இதற்கிடையில் ஜாம்ஷெட்பூரில் நேற்று இரவு நடந்த 45-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) எப்.சி. அணிகள் சந்தித்தன. இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. துளிகள்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணி தனது கடைசி 5 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் கோவா அணி
ஐ.எஸ்.எல். கால்பந்தின் இறுதிப்போட்டிக்கு கோவா அணி தகுதிபெற்றது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணியை வீழ்த்தி பெங்களூரு இறுதிப்போட்டிக்கு தகுதி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கவுகாத்தி அணியை வீழ்த்தி பெங்களூரு இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணி ஆறுதல் வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கொல்கத்தா அணி ஆறுதல் வெற்றிபெற்றது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை-ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிரா ஆனது.