கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி போராடி தோல்வி + "||" + ISL Football: Chennai team struggled to defeat

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி போராடி தோல்வி

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி போராடி தோல்வி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை அணி போராடி தோல்வியடைந்தது.
சென்னை,

10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவுடன் மல்லுகட்டியது.


விறுவிறுப்பான இந்த மோதலில் 14-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ஜெயேஷ் ரனே நீண்ட தூரத்தில் இருந்து சூப்பராக கோல் அடித்தார். 24-வது நிமிடத்தில் சென்னை வீரர் தோய்சிங் கோல் திருப்பி ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். 44-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ஹிதேஷ் ஷர்மா அருகில் வந்து இலக்கை நோக்கி அடித்த ஷாட்டை, சென்னை வீரர் சபியா பந்தை கையால் தடுத்து விட்டார். இதனால் வழங்கப்பட்ட பெனால்டியை கொல்கத்தா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மானுல் லான்ஜரோட் கோலாக்கினார்.

பிற்பாதியில் சென்னை வீரர்கள் வேகத்தை தீவிரப்படுத்தினர். சென்னை வீரர்கள் பக்கமே பந்து கொஞ்சம் அதிகமாக (53 சதவீதம்) சுற்றிக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை. இந்த சூழலில் 80-வது நிமிடத்தில் கோல்பகுதியில் வைத்து பந்தை தடுக்க சென்னை வீரர்களில் சிலர் ஒருசேர முயற்சித்த போது, அந்த குழப்பத்திற்கு இடையே பந்து கார்லஸ் சலோமின் கையில் பட்டு விட்டது. இதனால் மறுபடியும் கொல்கத்தா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்த பெனால்டியையும் லான்ஜரோட் கோலாக மாற்றினார். இதன் பின்னர் 88-வது நிமிடத்தில் சென்னை வீரர் இசாக் வன்மல்சவ்மா அடித்த கோல் தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது.

முடிவில் சென்னை அணி 2-3 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வி அடைந்தது. தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வரும் சென்னை அணி 10 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 7 தோல்வி என்று 5 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது. உள்ளூரில் இந்த சீசனில் இதுவரை சென்னை அணி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணிக்கு இது 4-வது வெற்றியாகும். இன்றைய ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்-மும்பை சிட்டி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.



தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி அணி முதல் வெற்றி, 3-1 கோல் கணக்கில் சென்னையை சாய்த்தது
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி டெல்லி அணி முதல் வெற்றிபெற்றது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை-டெல்லி அணிகள் இன்று மோத உள்ளன.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? - இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடரில் இன்று இரவு சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கேரளா ஆட்டம் ‘டிரா’
10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து; சென்னை அணி முதல் வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.