கால்பந்து

ஆசிய கோப்பை கால்பந்து போட்டி: முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி!! + "||" + India defeats Thailand 4-1 in the group stage match of the AFC Asian Cup 2019

ஆசிய கோப்பை கால்பந்து போட்டி: முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி!!

ஆசிய கோப்பை கால்பந்து போட்டி: முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி!!
ஆசியன் கோப்பை கால்பந்து தொடரின் முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
அபுதாபி,

17–வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று இரவு தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உள்பட 24 அணிகள் கலந்து கொண்டுள்ளன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து, பக்ரைன் ஆகியவை அந்த பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளாகும். லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3–வது இடம் பெறும் அணிகளில் 4 சிறந்த அணிகள் 2–வது சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் அபுதாபியில் இரவு 7 மணிக்கு நடைபெற்ற தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, தாய்லாந்தை எதிர்கொண்டது.  ஆசியன் கோப்பை கால்பந்து தொடரின் முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. தாய்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.