ஆசிய கோப்பை கால்பந்தில் அமீரகத்திடம் தோல்வி: அடுத்த சுற்றுக்கு இந்திய அணி முன்னேறும் - பயிற்சியாளர் நம்பிக்கை


ஆசிய கோப்பை கால்பந்தில் அமீரகத்திடம் தோல்வி: அடுத்த சுற்றுக்கு இந்திய அணி முன்னேறும் - பயிற்சியாளர் நம்பிக்கை
x
தினத்தந்தி 11 Jan 2019 10:45 PM GMT (Updated: 11 Jan 2019 10:30 PM GMT)

ஆசிய கோப்பை கால்பந்தில் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அபுதாபி,

17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது முதலாவது லீக்கில் தாய்லாந்தை பந்தாடியது. நேற்று முன்தினம் அபுதாபியில் நடந்த தனது 2-வது லீக்கில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் ஐக்கிய அரபு அமீரகத்திடம் தோல்வியை தழுவியது. இதன் பின்னர் இந்திய பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டின் நிருபர்களிடம் கூறுகையில், ‘பக்ரைனுக்கு எதிரான கடைசி லீக்கில் (14-ந்தேதி) நாங்கள் வெற்றி பெறும் நோக்குடன் ஆடுவது அவசியமாகும். இதில், அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்குரிய சாதகமான முடிவை பெற முடியும் என்று நம்புகிறேன்’ என்றார். பக்ரைன் அணியை எதிர்கொள்ள திட்டங்கள் வகுத்து தயாராக இருப்பதாக இந்திய கேப்டன் சுனில் சேத்ரி கூறினார்.

இதற்கிடையே நேற்று நடந்த லீக் ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 3-0 என்ற கோல் கணக்கில் பாலஸ்தீனத்தையும் (பி பிரிவு), சீனா 3-0 என்ற கோல் கணக்கில் பிலிப்பைன்சையும் (சி பிரிவு) தோற்கடித்தன.

Next Story