கால்பந்து

லா லிகா கால்பந்து போட்டியில் 400-வது கோல் அடித்த மெஸ்சி + "||" + Messi scored the 400th goal in La Liga football match

லா லிகா கால்பந்து போட்டியில் 400-வது கோல் அடித்த மெஸ்சி

லா லிகா கால்பந்து போட்டியில் 400-வது கோல் அடித்த மெஸ்சி
லா லிகா லீக் கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது.

பார்சிலோனா,-

லா லிகா லீக் கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. முன்னணி கிளப் அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் எய்பார் அணியை தோற்கடித்தது. பார்சிலோனா அணியில் சுவாரஸ் (உருகுவே) 19-வது மற்றும் 59-வது நிமிடத்திலும், லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா) 53-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 435-வது லா லிகா ஆட்டத்தில் ஆடிய 31 வயதான லயோனல் மெஸ்சி இந்த போட்டியில் அடித்த 400-வது கோல் இதுவாகும். இந்த சீசனில் அடித்த 17-வது கோல் இது. இந்த போட்டியில் அதிக கோல் அடித்தவர் மெஸ்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் 19 ஆட்டங்களில் ஆடி இருக்கும் பார்சிலோனா அணி 13 வெற்றி, 4 டிரா, 2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அட்லெடிகோ மாட்ரிட் 19 ஆட்டத்தில் ஆடி 10 வெற்றி, 8 டிரா, 1 தோல்வியுடன் 2-வது இடத்தில் உள்ளது.