கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 10–வது தோல்வி + "||" + ISL Football: Chennai's 10th defeat

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 10–வது தோல்வி

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 10–வது தோல்வி
கவுகாத்தியில் நடந்த 61–வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி (கவுகாத்தி) 1–0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி 6–வது வெற்றியை பெற்றது.

கவுகாத்தி, 

5–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் நேற்றிரவு கவுகாத்தியில் நடந்த 61–வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி (கவுகாத்தி) 1–0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி 6–வது வெற்றியை பெற்றது. கவுகாத்தி அணியில் வெற்றிக்குரிய கோலை 87–வது நிமிடத்தில் பார்த்தோலோம் ஒக்பேச் அடித்தார். ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட சென்னை அணி 13–வது லீக்கில் ஆடி சந்தித்த 10–வது தோல்வி இதுவாகும். இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி– பெங்களூரு எப்.சி. அணிகள் (இரவு 7.30 மணி) சந்திக்கின்றன.