கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-புனே அணிகள் இன்று மோதல் + "||" + ISL Football: Chennai-Pune teams clash today

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-புனே அணிகள் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-புனே அணிகள் இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை-புனே அணிகள் இன்று மோத உள்ளன.
சென்னை,

5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 67-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-எப்.சி.புனே சிட்டி அணிகள் மோதுகின்றன. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட நடப்பு சாம்பியனான சென்னை அணி இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 10 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த ஒரு வெற்றியும் புனே அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் கிடைத்தது. இதனால் சென்னை அணி உள்ளூர் மைதானத்தில் வெற்றி கணக்கை தொடங்கி ஆறுதல் அளிக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். துவண்டு போய் உள்ள சென்னை அணியை வலுப்படுத்தும் விதமாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த 29 வயதான கிறிஸ்டோபர் ஹெர்ட் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


அதே சமயம் 12 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி பெற்றுள்ள புனே அணி அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்த இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது முக்கியமானதாகும். இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இதற்கிடையே மும்பையில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை தோற்கடித்து 7-வது வெற்றியை பெற்றது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆரணி எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்துறையினர் விசாரணை
சென்னை விமான நிலையத்தில் ஆரணி எம்.பி. செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
2. பெட்ரோல் விலை 32 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
பெட்ரோல் விலை 32 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.74.14- க்கு விற்பனையாகிறது.
3. பானி புயல் காரணமாக இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை 9 விரைவு ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே
பானி புயல் காரணமாக இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை 9 விரைவு ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
4. ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது -சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-டெல்லி அணிகள் இன்று மீண்டும் மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-டெல்லி அணிகள் இன்றிரவு மீண்டும் கோதாவில் இறங்குகின்றன.