கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவிடம் வீழ்ந்தது கொல்கத்தா + "||" + ISL Football: Kolkata fell to Goa

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவிடம் வீழ்ந்தது கொல்கத்தா

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவிடம் வீழ்ந்தது கொல்கத்தா
10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு கோவாவில் நடந்த 76-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை பந்தாடி 8-வது வெற்றியை பதிவு செய்தது. கோவா அணியில் ஜாக்கிசந்த் சிங், பெரான் கோரோமினாஸ் (2 கோல்) ஆகியோர் கோல் போட்டனர். அதே சமயம் 16-வது லீக்கில் ஆடிய கொல்கத்தா அணி 5 வெற்றி, 6 டிரா, 5 தோல்வி என்று 21 புள்ளிகளுடன் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இந்த தோல்வியின் மூலம் கொல்கத்தா அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து போய் விட்டது.

கொச்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்சை சந்திக்கிறது.