கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்தில் சென்னை அணி 12–வது தோல்வி + "||" + In ISL football Chennai 12th defeat

ஐ.எஸ்.எல். கால்பந்தில் சென்னை அணி 12–வது தோல்வி

ஐ.எஸ்.எல். கால்பந்தில் சென்னை அணி 12–வது தோல்வி
5–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, சென்னையின் எப்.சி.யை எதிர்கொண்டது.

கொச்சி, 

5–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கொச்சியில் நேற்றிரவு அரங்கேறிய 77–வது லீக் ஆட்டத்தில் ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, சென்னையின் எப்.சி.யை எதிர்கொண்டது. இதில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் அபாரமாக ஆடிய கேரளா பிளாஸ்டர்ஸ் 3–0 என்ற கோல் கணக்கில் சென்னையை வீழ்த்தி 2–வது வெற்றியை பதிவு செய்தது. கேரள அணியில் மடேஜ் பாப்லாட்னிக் (23, 55–வது நிமிடம்), சஹால் அப்துல் சமாட் (71–வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். 16–வது லீக்கில் ஆடிய நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணிக்கு இது 12–வது தோல்வியாகும்.

இன்று இரவு 7.30 மணிக்கும் நடக்கும் லீக்கில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.– புனே சிட்டி அணிகள் சந்திக்கின்றன.


ஆசிரியரின் தேர்வுகள்...