கால்பந்து

சிறுவர்கள் கால்பந்து: ஜேப்பியார் அணி ‘சாம்பியன்’ + "||" + Boys football: jpr team 'champion'

சிறுவர்கள் கால்பந்து: ஜேப்பியார் அணி ‘சாம்பியன்’

சிறுவர்கள் கால்பந்து: ஜேப்பியார் அணி ‘சாம்பியன்’
சிறுவர்கள் கால்பந்து போட்டியில் ஜேப்பியார் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னை,

சென்னையின் எப்.சி.சார்பில் பூஸ்ட் ஆதரவுடன் 13 மற்றும் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான கால்பந்து போட்டி சென்னையில் நடந்தது. இதில் 15 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இறுதிப்போட்டியில் ஜேப்பியார் மெட்ரிகுலேசன் பள்ளி அணி 8-0 என்ற கோல் கணக்கில் வித்யா மந்திர் பள்ளி அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 13 வயதுக்கு உட்பட்ட பிரிவின் இறுதி சுற்றில் அஞ்சுமான் மெட்ரிகுலேசன் அணி 9-0 என்ற கோல் கணக்கில் செயின்ட் பேட்ரிக்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. பரிசளிப்பு விழாவில் சென்னையின் எப்.சி. அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் கிரிகோரி, வீரர் தனபால் கணேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசு வழங்கியதுடன், இளம் வீரர்களுக்கு ஆட்ட நுணுக்கம் குறித்த ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.