கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’ + "||" + ISL Football: Chennai-Jamshedpur Match 'Draw'

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை-ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிரா ஆனது.
சென்னை,

5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 84-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை சந்தித்தது. உப்பு சப்பில்லாமல் நகர்ந்த இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) டிரா ஆனது. கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் புகுந்த ஜாம்ஷெட்பூர் அணி, டிரா செய்ததால் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. சென்னை அணி 17 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 டிரா, 12 தோல்விகளுடன் கடைசி இடத்தில் பரிதாபமாக தொடருகிறது.


இன்னும் 6 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் பெங்களூரு, கோவா, மும்பை, நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்றைய லீக் ஆட்டத்தில் புனே சிட்டி-டெல்லி டைனமோஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.