கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்தில் கடைசி லீக்கிலும் சென்னையின் எப்.சி. தோல்வி + "||" + ISL. In football In the last league FC in Chennai Failure

ஐ.எஸ்.எல். கால்பந்தில் கடைசி லீக்கிலும் சென்னையின் எப்.சி. தோல்வி

ஐ.எஸ்.எல். கால்பந்தில் கடைசி லீக்கிலும் சென்னையின் எப்.சி. தோல்வி
10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது.
கோவா,

கோவா நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 87-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 0-1 என்ற கோல் கணக்கில் எப்.சி.கோவாவிடம் வீழ்ந்தது. வெற்றிக்குரிய கோலை கோவா வீரர் பெரான் கோரோமினாஸ் 26-வது நிமிடத்தில் அடித்தார். கோவா அணிக்கு இது 10-வது வெற்றியாகும்.


இத்துடன் சென்னை அணியின் ஆட்டங்கள் முடிவுக்கு வந்தது. நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே தகிடுதத்தம் போட்டது. 18 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 டிரா, 13 தோல்வி என்று 9 புள்ளியுடன் பரிதாபமாக கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறியது. நடப்பு தொடரில் மொத்தம் 16 கோல்கள் அடித்துள்ள சென்னை அணி 32 கோல்களை விட்டுக்கொடுத்துள்ளது.

இன்றைய லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (இரவு 7.30 மணி) அணிகள் கொச்சியில் சந்திக்கின்றன.