கால்பந்து

ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று: சென்னை–கொழும்பு அணிகள் ஆட்டம் ‘டிரா’ + "||" + Asian Cup Football Qualification Round: Chennai-Colombo teams play 'draw'

ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று: சென்னை–கொழும்பு அணிகள் ஆட்டம் ‘டிரா’

ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று: சென்னை–கொழும்பு அணிகள் ஆட்டம் ‘டிரா’
இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான பிளே–ஆப் தகுதி சுற்று ஆட்டத்தில் 2 முறை ஐ.எஸ்.எல். கால்பந்து சாம்பியனான சென்னையின் எப்.சி.–கொழும்பு எப்.சி. (இலங்கை) அணிகள் மோதிய ஆட்டம் கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று மாலை நடந்தது.

கொழும்பு,

இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான பிளே–ஆப் தகுதி சுற்று ஆட்டத்தில் 2 முறை ஐ.எஸ்.எல். கால்பந்து சாம்பியனான சென்னையின் எப்.சி.–கொழும்பு எப்.சி. (இலங்கை) அணிகள் மோதிய ஆட்டம் கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 2–வது ஆட்டம் ஆமதாபாத்தில் வருகிற 13–ந் தேதி நடக்கிறது. ஆட்டம் முடிந்த பிறகு சென்னையின் எப்.சி. அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் கிரிகோரி கருத்து தெரிவிக்கையில், ‘எதிர்பார்த்தபடி இந்த ஆட்டம் கடினமாக இருந்தது. கோல் அடிக்க முடியும் என்று நினைத்தோம். ஆனால் அது முடியாமல் போய் விட்டது. அடுத்த ஆட்டத்துக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. அந்த ஆட்டத்தில் இன்னும் சிறப்பாக செயல்படுவோம்’ என்றார்.


ஆசிரியரின் தேர்வுகள்...