கால்பந்து

அர்ஜென்டினா கால்பந்து அணியில் மீண்டும் மெஸ்சி + "||" + Argentine football team Back to the messi

அர்ஜென்டினா கால்பந்து அணியில் மீண்டும் மெஸ்சி

அர்ஜென்டினா கால்பந்து அணியில் மீண்டும் மெஸ்சி
கடந்த ஆண்டு ரஷியாவில் நடந்த உலககோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி 2–வது சுற்றுடன் வெளியேறியது.

பியூனஸ் அயர்ஸ்,

கடந்த ஆண்டு ரஷியாவில் நடந்த உலககோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி 2–வது சுற்றுடன் வெளியேறியது. அந்த அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி, அதன் பிறகு அர்ஜென்டினா அணியில் இடம் பெறுவதை தவிர்த்து வந்தார். இதனால் அவரது சர்வதேச கால்பந்து வாழ்க்கை முடிவுக்கு வருவதாக கூறப்பட்டது. அதே சமயம் பார்சிலோனா கிளப்புக்காக தொடர்ந்து விளையாடி வந்தார்.

இந்த நிலையில் 31 வயதான மெஸ்சி 2018–ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு பிறகு முதல் முறையாக அர்ஜென்டினா அணிக்கு நேற்று தேர்வு செய்யப்பட்டார். வெனிசுலா மற்றும் மொராக்கோ அணிகளுக்கு எதிரான நட்புறவு ஆட்டங்களில் அவர் களம் காண இருக்கிறார்.


ஆசிரியரின் தேர்வுகள்...