கால்பந்து

ஆசிய கோப்பை கிளப் கால்பந்து போட்டிக்கு சென்னை அணி தகுதி + "||" + Chennai team qualifies for the Asia Cup club football tournament

ஆசிய கோப்பை கிளப் கால்பந்து போட்டிக்கு சென்னை அணி தகுதி

ஆசிய கோப்பை கிளப் கால்பந்து போட்டிக்கு சென்னை அணி தகுதி
ஆசிய கோப்பை கிளப் கால்பந்து போட்டிக்கு சென்னை அணி தகுதிபெற்றது.
ஆமதாபாத்,

ஆசிய கோப்பை கிளப் கால்பந்து போட்டிக்கான தென்மண்டல பிளே-ஆப் தகுதி சுற்றின் 2-வது ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. (இந்தியா)-கொழும்பு எப்.சி. (இலங்கை) அணிகள் ஆமதாபாத்தில் நேற்று மோதின. விறுவிறுப்பான இந்த மோதலில் சென்னையின் எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொழும்பு எப்.சி.யை தோற்கடித்தது. வெற்றிக்குரிய கோலை ஜெஜெ லால்பெகுலா 68-வது நிமிடத்தில் அடித்தார். ஏற்கனவே இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது சுற்று கோல் இன்றி டிரா ஆனது. இரு ஆட்டங்களின் முடிவின் அடிப்படையில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையுடன் சென்னையின் எப்.சி. அணி, ஆசிய கோப்பை போட்டியின் பிரதான குரூப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஆசிரியரின் தேர்வுகள்...