கால்பந்து

தெற்காசிய கால்பந்து: இந்திய பெண்கள் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் + "||" + South Asian Football: Indian women's team progress to the final

தெற்காசிய கால்பந்து: இந்திய பெண்கள் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

தெற்காசிய கால்பந்து: இந்திய பெண்கள் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
தெற்காசிய கால்பந்து போட்டியில், இந்திய பெண்கள் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பிராத்நகர்,

5-வது தெற்காசிய பெண்கள் கால்பந்து போட்டி நேபாளத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 4 முறை சாம்பியனான இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை தோற்கடித்து தொடர்ச்சியாக 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. இந்திய அணியில் டாலிமா சிப்பெர் (18-வது நிமிடம்), மனிஷா (90-வது நிமிடம்) தலா ஒரு கோலும், இந்துமதி (23-வது, 37-வது நிமிடம்) 2 கோலும் அடித்தனர். மற்றொரு அரைஇறுதியில் நேபாளம் அணி 4-0 என்ற கோல் கணக்கில் இலங்கையை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது. நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்துக்கின்றன.