ஐரோப்பிய கால்பந்து தகுதி சுற்று: ஸ்பெயின் அணி வெற்றி


ஐரோப்பிய கால்பந்து தகுதி சுற்று: ஸ்பெயின் அணி வெற்றி
x
தினத்தந்தி 27 March 2019 9:00 PM GMT (Updated: 27 March 2019 7:35 PM GMT)

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி 2020–ம் ஆண்டு நடக்கிறது. தற்போது இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.

டாகுவாலி, 

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி 2020–ம் ஆண்டு நடக்கிறது. தற்போது இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் மால்டாவில் உள்ள டாகுவாலியில் நடந்த ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின்–மால்டா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 2–0 என்ற கோல் கணக்கில் மால்டாவை தோற்கடித்து 2–வது வெற்றியை ருசித்தது. மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி அணி 6–0 என்ற கோல் கணக்கில் லிச்டென்ஸ்டினை எளிதில் வென்றது. சுவிட்சர்லாந்து–டென்மார்க் (3–3), நார்வே–சுவீடன் (3–3), போஸ்னியா–கிரீஸ் (2–2) அணிகள் இடையிலான ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.


Next Story