கால்பந்து

ஆசிய கோப்பை கிளப் கால்பந்து: சென்னையின் எப்.சி.- மினர்வா பஞ்சாப் அணிகள் இன்று மோதல் + "||" + Asian Cup Club Football: Chennaiyin fc-Minerva Punjab teams today clash

ஆசிய கோப்பை கிளப் கால்பந்து: சென்னையின் எப்.சி.- மினர்வா பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

ஆசிய கோப்பை கிளப் கால்பந்து: சென்னையின் எப்.சி.- மினர்வா பஞ்சாப் அணிகள் இன்று மோதல்
ஆசிய கோப்பை கிளப் கால்பந்து போட்டியில், சென்னையின் எப்.சி.- மினர்வா பஞ்சாப் அணிகள் இன்று மோத உள்ளன.
ஆமதாபாத்,

ஆசிய கோப்பை கிளப் கால்பந்து போட்டியின் தென் மண்டல குரூப் சுற்று பிரிவில் மொத்தம் 36 அணிகள் இடம் பெற்றுள்ளன. அவை 9 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஐ.எஸ்.எல். போட்டியில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி ‘இ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. அந்த பிரிவில் மினர்வா பஞ்சாப் (இந்தியா), டாக்கா அபாகானி (வங்காளதேசம்), மனங் மார்ஷ்யாங்டி (நேபாளம்) ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. குரூப் பிரிவில் சென்னையின் எப்.சி. அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் மினர்வா பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் ஆமதாபாத்தில் இன்று (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.