கால்பந்து

ஆசிய கோப்பை கிளப் கால்பந்து:சென்னையின் எப்.சி.- மினர்வா பஞ்சாப் ஆட்டம் ‘டிரா’ + "||" + Asian Cup Club Football

ஆசிய கோப்பை கிளப் கால்பந்து:சென்னையின் எப்.சி.- மினர்வா பஞ்சாப் ஆட்டம் ‘டிரா’

ஆசிய கோப்பை கிளப் கால்பந்து:சென்னையின் எப்.சி.- மினர்வா பஞ்சாப் ஆட்டம் ‘டிரா’
ஆசிய கோப்பை கிளப் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி, மினர்வா பஞ்சாப் ஆட்டம் டிராவில் முடிந்தது.
ஆமதாபாத்,

ஆசிய கோப்பை கிளப் கால்பந்து போட்டியின் தென் மண்டல குரூப் சுற்று போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 36 அணிகள் 9 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் ஆமதாபாத்தில் நேற்று நடந்த ‘இ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் 2 முறை ஐ.எஸ்.எல். சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, மினர்வா பஞ்சாப்பை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.

முன்னதாக இதேபிரிவில் நேபாளத்தில் உள்ள லலித்புரில் நடந்த லீக் ஆட்டத்தில் மனங் மார்ஷ்யாங்டி (நேபாளம்) - டாக்கா அபாகானி (வங்காளதேசம்) கிளப் அணிகள் மோதின. இதில் டாக்கா அபாகானி அணி 1-0 என்ற கோல் கணக்கில் மனங் மார்ஷ்யாங்டி அணியை வீழ்த்தியது. வெற்றிக்கான கோலை 28-வது நிமிடத்தில் டாக்கா அபாகானி வீரர் மாசி சைகானி அடித்தார்.