கால்பந்து

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பார்சிலோனா கிளப் அரைஇறுதிக்கு தகுதி மற்றொரு ஆட்டத்தில் ரொனால்டோ அணி தோல்வி + "||" + Champions League football: Barcelona Club qualifies for semi-finals

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பார்சிலோனா கிளப் அரைஇறுதிக்கு தகுதி மற்றொரு ஆட்டத்தில் ரொனால்டோ அணி தோல்வி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பார்சிலோனா கிளப் அரைஇறுதிக்கு தகுதி மற்றொரு ஆட்டத்தில் ரொனால்டோ அணி தோல்வி
64–வது ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து தொடரில், கால்இறுதியின் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் யுவென்டஸ் (இத்தாலி கிளப்)– அஜாக்ஸ் (நெதர்லாந்து கிளப்) அணிகள் துரின் நகரில் நேற்று முன்தினம் சந்தித்தது.

துரின், 

64–வது ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து தொடரில், கால்இறுதியின் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் யுவென்டஸ் (இத்தாலி கிளப்)– அஜாக்ஸ் (நெதர்லாந்து கிளப்) அணிகள் துரின் நகரில் நேற்று முன்தினம் சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் அஜாக்ஸ் அணி, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவை உள்ளடக்கிய யுவென்டசை 2–1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து அதிர்ச்சி அளித்தது. யுவென்டஸ் அணியில் ரொனால்டோவும் (28–வது நிமிடம்), அஜாக்ஸ் அணியில் வான் டி பீக் (34–வது நிமிடம்), டி லிட் (67–வது நிமிடம்) கோல் போட்டனர். இவ்விரு அணிகள் இடையிலான கால்இறுதியின் முதல் சுற்று 1–1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இரு ஆட்டத்தின் கோல் அடிப்படையில் அஜாக்ஸ் அணி 3–2 என்ற கோல் கணக்கில் யுவென்டசை வெளியேற்றி, 1997–ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தது.

இதே போல் பார்சிலோனா நகரில் நடந்த மற்றொரு கால்இறுதியின் 2–வது சுற்றில் பார்சிலோனா (ஸ்பெயின்) 3–0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட்டை (இங்கிலாந்து) பந்தாடியது. பார்சிலோனா கேப்டன் லயோனல் மெஸ்சி 2 கோலும் (16 மற்றும் 20–வது நிமிடம்), காட்டினோ (61–வது நிமிடம்) ஒரு கோலும் அடித்தனர். ஏற்கனவே முதலாவது சுற்றிலும் வெற்றி கண்டிருந்த பார்சிலோனா அணி அரைஇறுதியை உறுதி செய்தது.