இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் யார்? 4 பேர் போட்டி


இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் யார்? 4 பேர் போட்டி
x
தினத்தந்தி 4 May 2019 11:37 PM GMT (Updated: 4 May 2019 11:37 PM GMT)

இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய பயிற்சியாளருக்கான நியமனத்தில் 4 பேர் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டின் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய பயிற்சியாளர் தேடுதல் வேட்டையை இந்திய கால்பந்து சம்மேளனம் முடுக்கி விட்டுள்ளது. பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் பங்கேற்றவரான தென்கொரியாவின் லீ மின் சங், பெங்களூரு எப்.சி.யின் பயிற்சியாளராக இருந்த ஆல்பர்ட் ரோகா (ஸ்பெயின்), குரோஷியா முன்னாள் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக், சுவீடன் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஹகான் எரிக்சன் ஆகிய 4 பேரை கால்பந்து சம்மேளனத்தின் தொழில்நுட்ப கமிட்டி இறுதி செய்துள்ளது.

இவர்களிடம் இந்திய முன்னாள் வீரர் ஷியாம் தபா தலைமையிலான தொழில்நுட்ப கமிட்டி வருகிற 8 அல்லது 9-ந்தேதிகளில் ‘ஸ்கைப்’ வாயிலாக நேர்காணல் நடத்த உள்ளது. இதன் முடிவில் புதிய பயிற்சியாளர் யார் என்பது தெரிய வரும். இந்திய கால்பந்து அணி கிங்ஸ் கோப்பை போட்டியில் ஜூன் 5 மற்றும் ஜூன் 8-ந்தேதிகளில் விளையாட உள்ளது. அதற்குரிய பயிற்சி முகாம் மே 3-வது வாரத்தில் தொடங்க உள்ளது. அதற்குள் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு விடுவார்.

Next Story