கால்பந்து

ஜூனியர் கால்பந்து: சென்னையின் எப்.சி. அணி அபார வெற்றி + "||" + Jr. Football: Chennaiyinfc team is a great success

ஜூனியர் கால்பந்து: சென்னையின் எப்.சி. அணி அபார வெற்றி

ஜூனியர் கால்பந்து: சென்னையின் எப்.சி. அணி அபார வெற்றி
ஜூனியர் கால்பந்து போட்டியில், சென்னையின் எப்.சி. அணி அபார வெற்றிபெற்றது.
சென்னை,

ஜூனியர் லீக் (15 வயதுக்குட்பட்டோர்) சென்னை மண்டல கால்பந்து போட்டி சென்னையில் நடந்து வந்தது. இதில் சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் நேற்று நடந்த கடைசி லீக்கில் சென்னையின் எப்.சி. அணி 7-0 என்ற கோல் கணக்கில் சென்னை சிட்டி எப்.சி.யை பந்தாடியது. முகமது லியாகத் 3 கோலும், ராகுல் கே.மன்ஜூலா 2 கோலும் அடித்தனர். சென்னை மண்டல பிரிவில் எப்.சி.மெட்ராஸ் 18 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து நேரடியாக இறுதி ரவுண்டுக்கு முன்னேறியது. 17 புள்ளியுடன் 2-வது இடத்தை பெற்ற சென்னையின் எப்.சி. அணி அடுத்த சுற்றை எட்டுவதற்கு பிளே-ஆப் சுற்றில் மோத வேண்டி உள்ளது.