கால்பந்து

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பார்சிலோனாவை வீழ்த்தி லிவர்பூல் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி + "||" + Champions League football: Defeat Barcelona Liverpool qualifies for the final

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பார்சிலோனாவை வீழ்த்தி லிவர்பூல் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பார்சிலோனாவை வீழ்த்தி லிவர்பூல் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

லிவர்பூல்,

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் நகரில் நேற்று முன்தினம் நடந்த அரைஇறுதியின் 2–வது சுற்று ஆட்டத்தில் பார்சிலோனா (ஸ்பெயின்)–லிவர்பூல் (இங்கிலாந்து) கிளப் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணி 4–0 என்ற கோல் கணக்கில் லயோனல் மெஸ்சி தலைமையிலான பார்சிலோனா அணியை வீழ்த்தியது. லிவர்பூல் அணியில் டிவோக் ஒரிஜி 7–வது, 79–வது நிமிடங்களிலும், ஜார்ஜினியோ 54–வது, 56–வது நிமிடங்களிலும் கோல் அடித்தனர். கடைசி வரை போராடியும் பார்சிலோனா அணியால் பதில் கோல் எதுவும் திருப்ப முடியவில்லை. 2 அரைஇறுதி ஆட்டங்கள் முடிவில் லிவர்பூல் அணி 4–3 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 2–வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன் அரைஇறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் பார்சிலோனா அணி 3–0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இறுதிப்போட்டி மாட்ரிட்டில் ஜூன் 1–ந் தேதி நடக்கிறது.