கால்பந்து

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: டாட்டன்ஹாம் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி + "||" + Champions League football: The Tottenham team qualifies for the final

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: டாட்டன்ஹாம் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: டாட்டன்ஹாம் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

ஆம்ஸ்டர்டாம், 

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் நடந்த அரைஇறுதியின் 2–வது சுற்று ஆட்டத்தில் டாட்டன்ஹாம் (இங்கிலாந்து)–அஜாக்ஸ் (நெதர்லாந்து) கிளப் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் டாட்டன்ஹாம் அணி 3–2 என்ற கோல் கணக்கில் அஜாக்ஸ் அணியை வீழ்த்தியது. முன்னதாக கடந்த வாரம் லண்டனில் நடந்த அரைஇறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் அஜாக்ஸ் அணி 1–0 என்ற கோல் கணக்கில் வென்று இருந்தது. இரண்டு அரைஇறுதி ஆட்டம் முடிவில் இரு அணிகளும் 3–3 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தாலும், வெளியூர் ஆட்டத்தில் அதிக கோல் அடித்ததன் அடிப்படையில் டாட்டன்ஹாம் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முதல்முறையாக முன்னேறியது. மாட்ரிட்டில் ஜூன் 1–ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் லிவர்பூல் (இங்கிலாந்து)–டாட்டன்ஹாம் அணிகள் மோதுகின்றன.