கால்பந்து

கிங்ஸ் கோப்பை கால்பந்து: இந்திய பயிற்சி அணியில் 37 வீரர்கள் + "||" + Kings Cup football: 37 players in Indian team

கிங்ஸ் கோப்பை கால்பந்து: இந்திய பயிற்சி அணியில் 37 வீரர்கள்

கிங்ஸ் கோப்பை கால்பந்து: இந்திய பயிற்சி அணியில் 37 வீரர்கள்
கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில், இந்திய பயிற்சி அணியில் 37 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
புதுடெல்லி,

கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டி தாய்லாந்து நாட்டில் ஜூன் 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய கால்பந்து அணிக்கான பயிற்சி முகாம் டெல்லியில் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. இந்த பயிற்சி முகாமுக்கான இந்திய அணி பட்டியலில் சுனில் சேத்ரி, மன்வீர்சிங், குர்பிரீத்சிங் சந்து, அம்ரிந்தர்சிங் உள்பட 37 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக ஹாளிச்சரண், மந்தர் ராவ் தேசாய், குருனியன், நரேந்தர் கெலாட், ஜெர்ரி, லால்ரின்சுலா ஆகியோருக்கு பயிற்சி முகாமுக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை.