கால்பந்து

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: லிவர்பூல் அணி 6–வது முறையாக சாம்பியன் + "||" + European Champions League football: Liverpool is the 6th time champion

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: லிவர்பூல் அணி 6–வது முறையாக சாம்பியன்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: லிவர்பூல் அணி 6–வது முறையாக சாம்பியன்
64–வது கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வந்தது.

மாட்ரிட்,

64–வது கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வந்தது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்று முன்தினம் இரவு மாட்ரிட் நகரில் இறுதிப்போட்டி அரங்கேறியது. மகுடத்துக்காக, டோட்டனம் ஹாட்ஸ்புர் (இங்கிலாந்து கிளப்), லிவர்பூல் (இங்கிலாந்து கிளப்) அணிகள் கோதாவில் குதித்தன. அரைஇறுதியில் பார்சிலோனா கிளப்புக்கு அதிர்ச்சி அளித்த லிவர்பூல் அணி இறுதிசுற்றிலும் அசத்தியது. 2–வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் முகமது சலா முதல் கோல் அடிக்க, 87–வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரர் டிவோக் ஒரிஜி இன்னொரு கோல் திணித்தார். முடிவில் லிவர்பூல் அணி 2–0 என்ற கோல் கணக்கில் ஹாட்ஸ்புரை வீழ்த்தி 6–வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதற்கு முன்பு 1977, 1978, 1981, 1984, 2005–ம் ஆண்டுகளிலும் லிவர்பூல் அணி பட்டம் வென்று இருந்தது.