கால்பந்து

பிரபல கால்பந்து வீரரை ஓட்டல் அறையில் சரமாரியாக தாக்கிய பெண் + "||" + Leaked footage of Neymar getting hit by the woman that accused him of raping her. This is absolutely shocking. p

பிரபல கால்பந்து வீரரை ஓட்டல் அறையில் சரமாரியாக தாக்கிய பெண்

பிரபல கால்பந்து வீரரை ஓட்டல் அறையில் சரமாரியாக தாக்கிய பெண்
நெய்மர் மீது பாரீஸ் ஓட்டலில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டிய பெண், நெய்மரை அதே ஓட்டல் அறையில் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
கத்தார் அணிக்கு எதிரான நட்பு கால்பந்து போட்டியில் காயமடைந்த பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் 'ஜூனியர் கோபா' அமெரிக்கா தொடரில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு எதிராக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

நெய்மர் மீது பாரீஸ் ஓட்டலில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் குற்றம் சாட்டினார். ஆனால் இதை நெய்மர் மறுத்தார். இருந்தாலும் இது சம்பந்தமான வீடியோ வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அந்த பெண்ணும், நெய்மரும் அதே ஓட்டல் அறையில் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் அந்த பெண் நெய்மரை தாக்குவதுமான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவானது நெய்மர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாக கூறப்படும் நாளிற்கு அடுத்தநாள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

வீடியோவில் அவர்கள் இருவரும் பேசிக்கொண்ட உரையாடலில், நெய்மர் அந்த பெண்ணிடம் 'தன்னை அடிக்க வேண்டாம்' என கேட்பதும், அதற்கு அந்த பெண் 'நான் உன்னை அடிக்காவிட்டால் நீ என்னை தாக்கி விடுவாய்' என்கிறார். அதற்கு, 'நான் அப்படி செய்ய மாட்டேன்' என நெய்மர் கூற, உடனே அந்த பெண், 'நான் உன்னை ஏன் அடிக்கிறேன் தெரியுமா, நேற்று நீ இப்படி தானே என்னை தாக்கிவிட்டு இங்கு தனியே விட்டு சென்றாய்' என்கிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...